451

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


451. கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
   தேர்தரு விருந்திற்1 ற விர்குதல் யாவது
   மாற்றருந்தானை நோக்கி
   ஆற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே.

     எ-து வேந்தற்கு உற்றுழிப்பிரிந்து தலைமகன் குறித்த பருவம்
நினைந்து ஆற்றியிருந்த தலைமகள் அப்பருவவரவின்கண் பாசறையி
னின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக்கேட்டு ஆற்றளாய்ச்
சொல்லியது.

    குறிப்பு. காலையொடு; ஒடு : இடப்பொருளது. கையற-செயலற.
தவிர்குதல் -என்பால் தங்குதல். யாவது-எத்தன்மையது. பிரிந்
தோர் தவிர்குதல் யாவது; இருத்தல் வேந்தனது தொழில்.

   (மேற்) இதுமுதற் பத்தும் முல்லையுட் பாலை (தொல். அகத்.
9. ந.)

   (பி-ம்) 1‘றகுதல்? ( 1 )