எ-து குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்
கின்ற முயற்சிகேட்ட தலைமகள் கூறியது.
குறிப்பு. வறந்த ஞாலம் தெளிர்ப்ப-நீர் வற்றிய உலகம் செழிப்ப.
கறங்குரல் = கறங்குகுரல் -ஒலிக்கின்ற ஓசையையுடைய: விகாரம்:
“தழங்குரல்” (ஐங். 448 : 1) போல. எழிலி -மேகம். கார் செய்
தன்றே-கார்காலத்தைச் செய்தது; அகநா. 4 : 7. காதலரது
முயற்சி. கவின் -அழகு. பீரத்தலர்-பீர்க்கம்பூ. பொன் போற் பீரம்:
நெடுநல் 14. பீரத்தலர் பசலைக்கு: குறுந். 98. முயற்சி பீரத்தலர்
செய்தன்று. ( 2 )