5. முல்லை
(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து
454.தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவி னன்ன நேரரும்பு பேணிக் கார் நயந் தெய்து முல்லையவர் தேர் நயந் தறையுமென் மாமைக் கவினே.
எ-து பருவவரவின்கண் தலைமகள் ஆற்றளாய்த் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. தளவு -செம்முல்லை. பையென - மெல்ல. தளவும் முல்லையும்: பொருந. 199-200: குறுந். 382 : 1-3. நயந்து -வருதலை விரும்பி. தேரை நயந்து என் கவின் உறையும்.