எ-து ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) அரசு பகைதணிந்த எல்லாரும் மீளும் வண்ணம்
கார் வந்தது: இத்தோளுக்குரியவரோ போதார் எ-று.
குறிப்பு. சினைஇ-கோபித்து. ஆர்குரல்-நிறைந்த ஒலி. மேக
வொலிக்கு முரசொலி உவமை. அளியவோ அளிய-மிக இரங்கத்
தக்கன; நற். 12 : 8; குறுந். 56 : 5; அகநா. 43 : 13. பசந்து-பசலை
நிறமடைந்து. இழை-ஆபரணம். சாஅய்-வருந்தி. தோள்
அளியவோ அளிய.
தோளுக்குரியவர்: கலித். 42 : 42; அகநா. 32 : 18-9.