457

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


457. பெய்பனி 1 நலிய வுய்தல்செல் லாது
    குருகின நரலும் பிரிருவருங் காலைத்
    துறந்தமை கல்லார் காதலர்
    மறந்தமை கல்லாதென் மடங்கெழு நெஞ்சே.

      எ-து பருவவரவின்கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.

      குறிப்பு. நலிய -துன்புறுத்த. உய்தல் சொல்லாது-உய்யாது.
நரலும் - ஒலிக்கின்ற. துறந்து அமைகல்லார் - நம்மைப்பிரிந்து
பொருந்தார். அமைகல்லாது -பொருந்தாது. காதலர் துறந்து
அமைகல்லார், நெஞ்சு மறந்து அமைகல்லாது.

    (பி-ம்) 1 ‘நளிய? ( 7 )