481

5. முல்லை

(49) தேர்வியங்கொண்ட பத்து


481. சாயிறைப் பணைத்தோ ளவ்வரி யல்குல்
   சேயிழை மாதரை யுள்ளி நோய்விட
   முள்ளிட் டூர்மதி வலவநின்
   புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே.

    எ-து வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
இனி வருகின்றபாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.

   குறிப்பு. சாய் இறைப் பணைத்தோள்-வளைந்த சந்தினையுடைய
பருத்த தோள்; குறுந். 168 : 5, 279 : 8. அவ்வரி-அழகிய வரிகள்.
உள்ளி-நினைந்து. நோய்விட-பிரிவுநோய் தீர. முள்-தாற்றுக்கோல்.
ஊர்மதி-ஊர்வாயாக. வலவ : விளி. புள்ளியல் கலிமா-புட்போல
நிலம் தீண்டாத செலவினையுடைய முழங்கிய குதிரை. ஐங். 486 : 5
; தொல். கற்பு. 53, ந. வலவ ! நோய்விட, தேரைமுள்ளிட்டு ஊர்மதி.
481-90. தேர்வியங்கொண்ட : வியங்கொள்ளல்-வினையினது
ஏவலைக் கொள்ளல் ; சிலப். 9 : 78.