62
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


62. இந்திர விழவிற் பூவி னன்ன
  புன்றலைப் பேடை வரிநிழ லகவும்
  இவ்வூர் 1மங்கையர்த் தொகுத்தினி
  எவ்வூர் நின்றன்று 2மகிழ்நநின் றேரே. இதுவுமது.

  குறிப்பு. இந்திரவிழவு : மருத நிலத்துக்குத் தெய்வமாகிய
இந்திரனைக் குறித்துச் செய்யப்படும் விழா; இவ்விதம் செய்தல் அந்
நிலத்தார் வழக்கம்; இது தொல். அகத். 5, ந. உரையாலும், சிலப்.
இந்திர விழவூரெடுத்த காதையாலும் அறியப்படும். பூவினன்ன
புன்றலை - பூவைப்போலச் சிவந்த தலை. வரிநிழலில் அகவும். நின்
தேர் எவ்வூரில் நின்றன்று? நின்றன்று - நின்றது; ஐங். 52 : 4.

  (பி-ம்.) 1 ‘மங்கையைத் தொகுத்து? 2 ‘மகிழ்ந்த நின்? ( 2 )