66
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


66. உடலினே னல்லேன் பொய்யா துரைமோ
   யாரவண் மகிழ்ந 1தானே தேரொடு
   தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின்
   வளமனை வருதலும் வௌவி யோளே.

  எ-து புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து புறத்துத் தங்கி வந்தா
னாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது.

  குறிப்பு. உடலினேன் - பகைத்தேன், உரைமோ - சொல்வா
யாக. தளர் நடைப்புதல்வன்; ஐங். 403 ; 5 ; ?குறுகுறு நடந்து
(புறநா. 188 : 3); ?குழவி தளர்நடை காண்ட லினிதே? (இனியது.
15). உள்ளி - நினைந்து. மனைக்கண் வருதலும். வௌவியோள் -
இங்கு வாராதிருக்க உன்னைப்பற்றினவள்.வௌவியோள் ஆகிய
அவள் யார்?

 (மேற்.) மு. புதல்வனை நீங்கியவழித் தலைவி கூறியது (தொல்.
கற்பு. 6, ந.)

  (பி-ம்) 1 ‘தானைத் தேரொடு? ( 6