69
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


69. கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே
  பலராடு பெருந்துறை மலரொடு வந்த
  தண்புனல் வண்ட லுய்த்தென
  உண்கண் சிவப்ப வழுதுநின் றோளே.

  எ-து தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக்
களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள் தனக்கில்லை
யென்று அவன் மறைத்துழிச் சொல்லியது.

  குறிப்பு. கண்டனெம்-பார்த்தேம். பெண்டு-காதற்பரத்தை.
வண்டல்-மணலாற் செய்யப்பெற்ற சிற்றிலை. உய்த்தென - கொண்டு
சென்றதென்று. உண்கண்-மையுண்ட கண்கள். அழுது நின்றோ
ளாகிய நின்பெண்டைக் கண்டனெமல்லமோ?

  (மேற்.) மு. காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்
தமை யறிந் தேனெனத் தலைவனை நோக்கித் தலைவி கூறியது (தொல்.
கற்பு. 6, ந.).                  ( 9 )