எ-து தன்னைக் கொடுமை கூறினால் தலைமகளென்பது கேட்ட
பரத்தை தலைமகள் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக
அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(ப-ரை.) குருகுடைத்துண்ட யாமை மிச்சிலை வினைஞர் உண
விற்கூட்டும் ஊரவெனவே நாங்கள் நுகர்ந்துகழித்த மார்பை நுகர்
வாளென்று தலைமகளைப் பழித்தவாறாம்.
குறிப்பு. குருகு-நாரை. உடைத்து உண்ட. வெள்ளகட்டி
யாமை-வெளுத்த வயிற்றினையுடைய ஆமையினது இறைச்சியை.
அரிப்பறை-அரித்தெழும் ஓசையை யுடைய பறை; மதுரைக். 262;
குறிஞ்சி. 193; புறநா. 396 : 4. அல்குமிசை-இட்டுவைத்து உண்ணும்
உணவோடு; புறநா. 236 : 2, 384 : 9. கூட்டும் ஊர. மலரணிவாயிற்
பொய்கை-மலரால் அழகு பெற்ற இடங்களையுடைய பொய்கை-
நயந்தனென்-விரும்பினேன். என்றி-என்று கூறுகிறாய். மனையோள்-
தலைவி. பெரிது வருந்துவள்.
(பி-ம்.) 1 ‘வினைஞர் நல்கு? ( 1 )