85

(9) புலவி விராய பத்து

 


85. 1வெண்ணுதற் கம்பு ளரிக்குரற் பேடை
   தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
   2மறுவில் யாணர் மலிகே 3ழூரநீ
   சிறுவரி னினைய 4செய்தி
   நகாரோ பெருமநிற் கண்டிசி னோரே.

 எ-து தலைமகன் பரத்தையர்மேற் காதல்கூர்ந்து நெடித்துச்செல்
வுழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.

  (ப-ரை.) கம்புட்பேடை சேவலொழியக் கிளையுடனே ஆலுமூர
என்றது ‘கிளையுடனே வாழ்கின்ற எமக்கு நின்னினீங்கிய மெலிவு
உளதாகக் கூறுகின்றே மல்லேம்; நின் குலத்தொழுக்கத்துக்குத்
தகாது? எனக் கழறியதாம்; ?தாய்போற் கழறித் தழீஇக் கோடல்,
ஆய்மனைக் கிழத்திக் குரித்தென மொழிப? என்றதூஉம் இத்திற
னோக்கியெனக் கொள்க.

  குறிப்பு. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - இனிய குரலை
யுடைய. கிளையோடு-தன் கூட்டத்தோடு. ஆலும்-கூவும்; ஆடு
கின்ற. மறு-குற்றம். யாணர்-புதுவருவாய். சிறுவரின்-சிறுவரைப்
போல. இனைய-இத்தன்மையான செயல்களை. செய்தி-செய்கிறாய்.
நிற் கண்டி சினோர்-நின்னைக் கண்டோர். கண்டிசினோர் நகாரோ.

  ?தாய்போற்.............. மொழிப? என்பது தொல். கற்பு 32.

  (மேற்.) மு. ‘தலைவன், மகனும் ஆற்றாமையும் வாயிலாக
வந்துழித் தலைமகள் எதிர் கோடல்? (நம்பி. கற்பு. 8).

  (பி-ம்.) 1 ‘வெண்டலைக்?, 2 ‘மறிவில்?, 3 ‘ழூர நின்?, 4‘செய்தியை? ( 5 )