86

(9) புலவி விராய பத்து

 


86. வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல்
   நீள்வய னண்ணி யிமிழு மூர
   எம்மிவ ணல்குத 1லரிது
   நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.

 எ-து புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார்
கூறக் கேட்டான் என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலை
மகற்குச் சொல்லியது.

 (ப-ரை.) குருகின் பார்ப்பு அழைக்கும் குரல் வயல் நண்ணி
இமிழுமூர என்றது நின்புதல்வன் கூறிவிடுத்தல் நீ கேட்டமை சேரி
யெல்லாம் அறிந்தது ; நின்னால் மறைத்தல் அரிதென்பதாம். பார்ப்
பினம் மெல்லிதாகப் பறத்தல் பற்றி மென்பறையென்று ஆகுபெயராற்
கூறியதெனக் கொள்க.

  குறிப்பு. குருகின்-குருகினது. பறை-பறத்தல்; கலித். 78 : 10.
அகநா. 40 : 3! சீவக. 2537. எம் இவண் நல்குதல்-எம்மை இங்கே
பாதுகாத்தல். மனை மடந்தை- தலைவி. தலைப்பெய்தீமே-கலப்பாயாக.

  (பி-ம்.) 1 ‘லறிதும்? ( 6 )