90

(9) புலவி விராய பத்து

 


90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்
   வண்டின் மாண்குண மகிழ்நன்கொண் டான்கொல்
   அன்ன தாகலு மறியாள்
   எம்மொடு புலக்குமவன் புதல்வன் றாயே.

 எ-து தலைமகன் தன்மனைக்கண் சொல்லாமல் தான் விலக்கு
கின்றாளாகத் தலைமகள் கூறினாளென்பது கேட்ட காதற்பரத்தை
தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது.

  குறிப்பு. மாண்குணம் - மாட்சிபொருந்திய குணத்தை. அவன்
புதல்வன் தாய் என்றது தலைவியை. தலைவன் தலைவியையும்,
பரத்தை தலைவியையும், தலைவி மாற்றாளையும் பரத்தையையும், இவர்
களைப் பிறரும் தனித்தனி இன்னாளென்று கூறாமல் புதல்வன்தாய்
என்றாவது மகன் தாய் என்றாவது கூறுதல் மரபு : ஐங். 405 : 4,
442 : 5; குறுந். 8 : 6; அகநா. 6 : 13, 16 : 19. வண்டு பல மலரிடத்தும்
சென்று தாதருந்துதல் போலத் தலைவனும் என்னைத் தவிர வேறுபல
மகளிரிடத்தும் சென்று இன்பம் துய்க்கின்றான்; எம்மிடம் மாத்திரம்
தலைவி புலத்தல் முறையன்று என்று புலந்து கூறினாள்.       ( 10 )

(9) புலவி விராய பத்து முற்றிற்று.