374

4 பாலை

(38) மகட்போக்கிய வழித் 1தாயிரங்கு பத்து


374.பல்லூழ் நினைப்பினு நல்லென் றூழ
   மீளி முன்பிற் காளை காப்ப
   முடியகம் புகாஅக் கூந்தலள்
   கடுவனு மறியாக் காடிறந் தோளே.

     எ-து. தலைமகள் உடன்போயவழி அவள் இளமைநினைந்து
இரங்கித் தாய் கூறியது.

   குறிப்பு. பல்லூழ்-பல முறை. நல் என்ற ஊழ- நல்லன என்ற
முறைகளையுடையன தலைவி செய்கைகள். மீளி முன்பின் காளை:
கூற்றுவனையொத்த வலியையுடைய தலைவன்; மீளி - கூற்றுவன்:
?மீளி மறவனும் போன்ம்? (கலித். 104 : 50, ந.). முடியகம் புகாக்
கூந்தலள்: முடித்தற்குரிய நீட்சியற்ற கூந்தலையுடைய பேதைப்
பருவத்தாள் என்றபடி; ?முடியாத கூந்தன் முடியாள்? (திருவாரூருலா).
கடுவனு மறியாக்காடு : முருகு. 42; நற். 194 : 7; அகநா. 92:
8-9, 368 : 8-9 கூந்தலள் காடிறந்தோள்.

  (மேற்.) மு. நற்றாய் தன்மகள் இளமைத் தன்மைக்கு உளம்
மெலிந்திரங்கல் (நம்பி வரைவு. 16) ( 4 )