392

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


392. வேய்வனப் பிழிந்த தோளும் வெயிறெற
ஆய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப்
1பரியல் வாழி தோழி 2பரியின்
எல்லையி லிடும்பை தரூஉம்
நல்வரை நாடனொடு 3வந்த மாறே.

     எ-து உடன் போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல்வருத்தம்
கண்டு ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது.

    குறிப்பு. வேயினது வனப்பை ; வேய்-மூங்கில். வெயில்தெற-
வெயில் வருத்த. ஆய்கவின்-ஆய்ந்த பேரழகு. பரியல் - வருந்தாதே.
வந்தமாறு - வந்ததனால். தோழி தோளையும் நுதலையும் நோக்கிப் பரி
யல், பரியின் வந்தமாறு இடும்பை தரும்.

   (மேற்.) மு. இது மீண்டு வந்த தலைவி வழிவரல் வருத்தங்கண்டு
வருந்திய தோழிக்குக் கூறியது (தொல். அகத். 42, ந.)

   (பி-ம்) 1‘பிரியல்’ 2‘பிரியன்’ 3‘வந்த வாறே’ ( 2 )