394

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


394. மாண்பில் கொள்ளையொடு மயங்குதுயர் செய்த
   அன்பி லறனு 1மருளிற்று மன்ற
   வெஞ்சுர மிறந்த வஞ்சி லோதிப்
   பெருமட மான்பிணை யலைத்த
   சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே.

   எ-து உடன்போய்த் தலைமகள் வந்துழித் தாய் சுற்றத்
தார்க்குச் சொல்லியது.

   குறிப்பு. துயரைச் செய்த அன்பில்லாத அறமும். மான்பிணை
யலைத்த; தலைவிக்கு அடை ; அலைத்த-வருத்திய. குறுமகட்
காட்டிய-தலைவியை யான் காட்டுதற்கு வம்மே - வாருங்கள்.

   (மேற்.) மு. இது தலைவி மீண்டுவந்துழித் தாய் சுற்றத்தார்க்குக்
காட்டியது (தொல். அகத். 36. ந.) (பி-ம்) 1‘மருளின்று? ( 4 )