449

5. முல்லை

(45) பாசறைப் பத்து


449. முரம்புகண் ணுடையத் திரியுந் திகிரியொடு
    பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து
    திண்ணிதின் மாண்டன்று தேரே
    ஒண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே.

    எ-து பாசறைக்கண் வேந்தனொடு வினைப்பொருட்டாற் போந்
திருந்த தலைமகன் அவ்வேந்தன் மாற்றுவேந்தர் தருதிறைகொண்டு
மீள்வானாகப் 1பொருந்துழித் தானும் மீட்சிக்குத் தேர்சமைத்த
எல்லைக் கண்ணே அவ்வரசன் பொருத்தம் தவிர்ந்து மீண்டும்
வினைமேற் கொண்டானாகச் சொல்லியது.

   குறிப்பு. முரம்பு கண் உடைய திரியும்-பருக்கையையுடைய
மேட்டு நிலத்திடம் விள்ளும்படி சுற்றுகின்ற : மலைபடு. 432; குறுந்.
400 : 4. திகிரி-சக்கரம். பணைநிலை முணைஇய வயமா-பந்தியில்
நிற்றலை வெறுத்த வலியுடைய குதிரைகள்; பணை-குதிரைப்பந்தி;
முணவுதல்-வெறுத்தல்; பதிற். 64 : 7. மாண்டன்று-மாட்சி
பொருந்தியது. வினை-போர்த்தொழிலை. மாப்புணர்ந்து தேர் மாண்
டன்று, வேந்து வினைவிடின் ஒண்ணுதலைக் காண்குவம்.

    பொருத்தம்-சந்தி.

    (மேற்.) மு. இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித்தானும்
சமைந்த தேரை அழைத்துக்கொண்டு திண்ணிதின் மாண்டன்று
தேரெனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறை வாங்காது
வினை மேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது. (தொல்.
அகத். 41, ந.).

   (பி-ம்.) 1 ‘பிரிந்துழித் தேர் சமைத்து அழைத்துழைக்கண்ட
எல்லை. ( 9 )