எ-து அறத்தோடு நின்றதோழி அது வற்புறுப்பான் வேண்டிச்
செவிலிக்குச் சொல்லியது.
(ப-ரை.) தண்கடல் வளையினும் இலங்குமென்றது மேனியில்
வேறுபாடு.
குறிப்பு. துதி காலன்னம்-தோலடியையுடைய அன்னம்;
துணை-பெடை, செத்து-அறிந்து. வளையினும் சங்கைக் காட்டிலும்.
அன்னப் பெடைக்குச் சங்கம் உவமை. அம் கலிழ் ஆகம்-அழகு
ஒழுகுகின்ற உடம்பு; ஐங். 174 : 4; குறுந். 143 : 7, 147 : 2, கண்டிசின்
காண்பாயாக; ஐங். 105 - வளையினும் இலங்கும் இவள் ஆகத்தை
நினைந்து கண்டிசின். உடம்பு விளர்த்தது இளைப்பினாலன்று
என்றபடி.
(பி-ம்.) 1 ‘லன்னநீ துணைசெத்து? ( 6 )