174


(18) தொண்டிப் பத்து


174. அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
   மணங்கமழ் பொழிற்குறி நல்கின் ணுணங்கிழைப்
   பொங்கரி பரந்த வுண்கண்
   அங்கலிழ் மேனி 1யசைஇய வெமக்கே.

 எ-து குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டுவந்த பாங்கன்
அவள் நின்றுழி நின்றாளென்று கூறியவழி ஆண்டுச் செல்லக்
கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

  குறிப்பு. அணங்குடை-வருத்தும் தெய்வத்தையுடைய.
அணங்குடைப் பனித்துறை : ஐங் 28 : 1, குறிப்பு நுணங்கு இழை-
நுண்ணிய தொழிலையுடைய ஆபரணங்களை. அம் கலிழ் மேனி-
அழகு ஒழுகுகின்ற மேனி; ஐங் 106 : 4, குறிப்பு இழையையும்
கண்ணையும் மேனியையும் உடைய தலைவி. அசைஇய-வருந்திய
மேனியை யுடையாள் எமக்குப் பொழிற்குறி நல்கினள்.

  (மேற்,) மு. இனி உள்ளப் புணர்ச்சியானின்றி இயற்கைப்
புணர்ச்சி இடையீடு பட்டுழி, பின் தலைமகள் குறியிடம் கூறிய வழி
அதனைப் பாங்கற்கு உரைத்தல் (தொல். களவு, 12, இளம்.). தான்
வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன்
கூறலின், இவ்வாறு ஆற்றனாய் இங்ஙனம் கூறினானென்று அஞ்சித்
தோழியுணராமல் தலைவி தானே கூடிய பகுதிக்கு உதாரணம்
(தொல். களவு. 11. .) காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்
(நம்பி. களவு. 28) ; இ-வி. 509.

  (பி-ம்.) 1 ‘யசையிய லெமக்கே’ ( 4 )