எ-து பாங்கற்கூட்டங் கூடி நீங்கும் தலைமகன் இனி வரு
மிடத்து நின்தோழியோடும் வரவேண்டுமெனத் தலைமகட்குச்
சொல்லியது.
குறிப்பு. அரிவை-தோழி. மென்மெல இயலி-மெத்தென மெத்
தென நடந்து ; மதுரைக். 608. வந்தி-வருவாயாக, பண்பு-குணம்
நின் பண்பு பல கொண்டு அரிவையொடு வந்திசின் : இசின் :
முன்னிலையசைச் சொல்.
(மேற்.) மு. தோழியுடம் பாட்டினைப் பெற்று மகிழல் (தொல்.
களவு. 16, இளம்.) இது பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன் நீ
வருமிடத்து நின் தோழியொடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக்
கூறியது (தொல். களவு. 11, ந,) தோழியுடம் பாடுபெற்று மனமகிழ்
தல் (தொல். களவு. 1. ந.). தலைவன் தலைவியைப் பாங்கியொடு
வருகெனப் பகர்தல் (நம்பி, களவு 21.)
(பி-ம்.) 1 ‘தமக்கு’ 2 ‘ஒண்ணுத’ ( 5 )