176


(18) தொண்டிப் பத்து


176. பண்பும் 1பாயலுங் கொண்டன டொண்டித்
   தண்கமழ் புதுமலர் நாறு மொண்டொடி
   ஐதமைந் தகன்ற வல்குற்
   கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.

 எ-து தலைமகளும் தோழியும் ஒருங்குநின்றுழிச் சென்ற தலை
மகன் ‘இவள் என்னை இவைகோடற்குக் காரணம் என்?’ என்று
தோழியை 2வினாவியது.

   (ப-ரை.) ‘கொண்டனள்’ என்றது தலைவியெனக் கொள்க.

குறிப்பு. பாயலும் கொண்டனள் என்றது தன் உறக்கத்தை
ஒழித்தாள் என்றபடி; ஐங். 195 : 4; கலித் 10 : 10. ந. நாறும்-மணம்
கமழும். ஐது-அழகிதாக. கொய்தளிர் மேனி; தலைவி; ஐங். 38 : 3;
நற். 251 : 7; குறுந். 356 : 8. தவறு கூறுமதி-யான் செய்த
தவற்றைக் கூறுவாயாக, தளிர் மேனி பண்பும் பாயலும் கொண்
டனள், என் தவறு கூறுமதி; ஐங். 177. கருத்து.

  (மேற்.) மு. தோழி இவள் கூறுகின்ற குறை தலைவியிடத்
தேயாய் இருந்ததென்று அவள் மேலே சேர்த்தி அதனை உண்மை
யென்று உணரத்தலைவன் கூறுதல் (தொல். களவு. 11, ந.).

  (பி-ம்.) 1 ‘பாலுங்’ 2 ‘வினாயது’    ( 6 )