எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான்
வந்துழிக் கண்டு 1உவகையோடு வந்த தோழி, ‘நின் கண்மலர்ச்
சிக்குக் காரணம் என்?? என்று வினாவிய தலைவிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘புன்னை நுண்டாது உறைத்தரு நெய்தல் பொன்படு
மணியிற்றோன்றும்? என்றது நின்குடிப்பிறப்புப் பண்டையினும்
சிறந்தற்குக் காரணமாயிற்றென்று அவன் வரைவு கூறியவாறாம்.
குறிப்பு. உறைத்தரும்-உதிரும். பொன்படுமணியின்-பொன்
னிற் பொருந்திய மணியைப்போல. புன்னைத்தாதிற்குப் பொன்னும்,
நெய்த பூவிற்கு மணியும் உவமை. பொற்ப-அழகுபெற. மெல்ல
புலம்பன் : ஐங். 120 : 4, குறிப்பு, வந்தென-வர. தோழி என்றது
தலைவியை நோக்கிய விளி. தோழி, என்கண் தலைவன் வந்தென
நல்லவாயின.
(பி-ம்.) 1 ‘நகையொடு? ( 9 )