307

4 பாலை

(31) செலவழுங்குவித்த பத்து


307. ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉம்
    குன்றுடை யருஞ்சுரஞ் செலவயர்ந் தனையே
    நன்றில் கொண்கநின் பொருளே
    பாவை யன்ன1 நின் றுணைப்பிரிந்து வருமே.

   எ-து பொருள் வயிற்பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக்
கூறிய வழித்தோழி அதனை இழித்துக் கூறியது.

  குறிப்பு. ஞெலிகழை - ஒன்றோடொன்று உரிஞ்சிக்கொண்ட
மூங்கில். வயமா-புலி. அழலினின்றும் வயமா வெரூஉம் குன்று.
செலவயர்ந்தனையே - செல்லவிரும்பினையே. துணை என்றது
தலைவியை. கொண்க, துணையைப் பிரிந்து வரும் நின்பொருள்
நன்று இல்.

   (பி-ம்) 1 ‘என்றுணைப் பிரிந்து’ ( 7 )