499

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


499. பிடவ மலரத் தளவ நனையக்
    கார்கவின் கொண்ட கானங் காணின்
    வருந்துவள் பெரிதென வருந்தொழிற் ககலாது
    வந்தன ரானங் காதலர்
    அந்தீங் கிளவிநின் னாய்நலங் கொண்டே.

இதுவுமது.

      குறிப்பு. நனைய-அரும்புவிட. காரால் கவின் கொண்ட. அக
லாது-நீங்காமல். கிளவி : விளி. நலங்கொண்டு நம் காதலர் வந்தன
ரால்; ஆல் : அசை. ( 9 )