எ-து வரைவிடைவைத்துப் பிரிவின்கண் அவனை நினைவு
விடாது ஆற்றாளாகியவழி, ‘சிறிதுமறந்து ஆற்றவேண்டும்’ என்ற
தோழிக்குத் தலைமகள் கூறியது.
(ப-ரை.) ‘வெண்டளை.............ஆனாது’ என்றது மழை பெய்வ
தற்குக் கால்வீழ்ந்த இருட்சியால் மறையப்பெறாது விளங்கித்
தோன்று தலை நோக்கியெனக் கொள்க.
குறிப்பு. நீ என்றது தோழியை, மறத்தல் வேண்டுதியாயின்-
மறத்தலை விரும்புவாயானால். கொண்டல் அவரைப்பூவினன்ன-
மழைக் காலத்து அவரைப்பூவைப் போன்ற. மழை-மேகத்தை.
ஆனாது-அமையாது. குன்று தோன்றல் ஆனாது. ((பி-ம்.) ) 1 ‘மறுத்
தல்’ ( 9 )