271

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


271. அவரை யருந்தி மந்தி பகர்வர்
   பக்கிற் றோன்று நாடன் வேண்டிற்
   பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்
   தொல்கே ளாகலி னல்குமா லிவட்கே.

   எ-து தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழிச் செவி
லிக்குத் தோழி அறத்தொடுநின்றது.

   (ப-ரை.) அவரையை நிறையத்தின்ற மந்தி பண்டவாணிகர்
பை போலத் தோன்றும் நாடனென்றது ஆண்டுவாழ்வனவும் மேலா
முணவுகளிற் குறைவின்றி வாழும் நாடன் எ-று.

  ‘பசுப்போல் பெண்டிரும்? என்றது வரைவெதிர்கொள்ளாத்
தமர் மறுத்த தீங்கினைத் தங்கள் மேல் ஏற்றி, இத்தீங்குசெய்யாது
தான் நினைத்த வழி ஒழுகும் குணமுடைய பெண்டிர்பலரையும்
பெறுகுவன், அவனே வேண்டினென்று கூறியவாறாகக் கொள்க.

  ‘பசுப்போற் பெண்டிரும்? என்று பாடமோதுவாருமுளர்.

  குறிப்பு. அவரை அருந்த-அவரையை அருந்திய; ஆர்ந்த என்
பது அருந்த எனக் குறுகி வந்தது. : இதைத் குறுக்கும் வழிக் குறுக்
கல் என்பர் (தொல். எச்ச,. 7, சே); கலித் 22 : 7 ந. பகர்வர்
பக்கின்-பண்டவாணிகரது பையைப்போல; கலித். 65 : 14. வேண்
டின்-விரும்பினால். தொல் கேள் ஆகலின்-பழைய நட்பையுடைய
னாதலின்.    ( 1 )