43

(5) புலவிப் பத்து


43. அம்பணத் தன்ன யாமை யேறிச்
   செம்பி னன்ன பார்ப்புப்பல துஞ்சும்
   யாண ரூர நின்னினும்
   பாணன் பொய்யன் பலசூ ளினனே.

  எ-து பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள்
பாணனோடு புகுந்து தெளித்துழிச் சொல்லியது.

(ப-ரை.) யாமைப்புறத்து ஏறிப் பார்ப்புப்பல துஞ்சும் ஊா
வென்றது மார்பில் துயில்கின்ற புதல்வரையுடையாய் எ-று.

  மகப்பெற்று வாழ்வார்க்குப் பொய்கூறல் ஆகாதென்பாம்.

    குறிப்பு. அம்பணம்-மரக்கால்; பதிற். 66:8, 71:5; சிலப். 14:209.
யாமை-ஆமை. யாமைக்கு அம்பணம் உவமை; செம்பினன்ன-
செம்பினையொத்த. பொய்யன்-பொய்கூறுபவன். சூளினன்-சூள்
மொழிகளைபுடையவன்.
                                  ( 3 )