எ-து பரத்தையர் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் 2தன்ம
னைக் கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது.
(ப-ரை.) நின்மார்பாற் கொள்ளும் பயனின்றிக் காட்சி
யெய்தவும் பெறுகின்றிலளெனப் புலந்து கூறியவாறறிக.
குறிப்பு. தீம் பெரும் பொய்கை - இனிய பெரிய பொய்கையில்.
தாய்முகம் நோக்கி-தாய்முகத்தைப் பார்த்து. வளர்ந்திசினாங்கு-
வளர்ந்தாற்போல; இசின்: படர்க்கைக்கண் வந்தது: புறநா. 11:9.
யாமைப் பார்ப்பைக் காமத்துக்கு உவமை கூறுதல் : குறுந். 152 :
4-5 அறனுமார் அதுவே; மார் : அசைநிலை; ஐங். 46 : 1, 50 : 4,
152.
(பி-ம்) 1 ‘யையன் மார்பே? 2 ‘தம்மனை? ( 4 )