21

(3) 1களவன் பத்து


21. முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்
   புள்ளிக் களவ னாம்ப லறுக்கும்
   தண்டுறை யூரன் றெளிப்பவும்
   உண்கண் பசப்ப தெவன்கொ லன்னாய்.

 எ-து ‘புறத்தொழுக்கம் எனக்கு இனியில்லை? என்று தலைமகன்
தெளிப்பவும் ‘அஃது உள்ளது? என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி
சொல்லியது.

(ப-ரை.) ‘முள்ளி நீடிய........... லறுக்குமூரன்? என்றது தனக்கு
உரித்தாகிய இல்லின்கண் ஒழுகிப் பரத்தையரோடு தொடர்ச்சி
அறுப்பான் எ-று.

குறிப்பு. முள்ளி-நீர்முள்ளிச்செடி. நீடிய-உயர்ந்து ஓங்கிய
நீரடைந்த கரையின்கண். புள்ளிக் கள்வன்-பொறியையுடைய
நண்டு, ?பொறியலவன்? (சிலப். 7:31). தெளிப்பவும்-தனக்குப்
புறத்தொழுக்கம் இல்லை என்று கூறித் தெளிவிக்கவும். உண்கண்-
மையுண்ட கண்கள். பசப்பது-பொன்னிறங்கொள்வது; ஐங். 16,
குறிப்பு. எவன் கொல்-யாது? அன்னாய்-அன்னையே; என்றது
தலைவியை தோழி தலைவியை அன்னையென்றல்: ?அன்னை
யென்னை? (தொல். பொருள். 52)

(மேற்.) அடி, 4 இறுதியடி இடையடி போன்று நிற்கும் அகப்
பாட்டு வண்ணத்துக்கு மேற்கோள் (தொல். செய். 224, பேர்.) மு.
‘ஆய் என்று இற்ற ஆசிரியம்? (யா. வி. செய். 16); இ , வி. 732.

     (பி-ம்.) ‘கள்வன்?                            ( 1 )