166


(17) சிறுவெண்காக்கைப் பத்து


166. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
    வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம்
    மெல்லம் புலம்பற் றேறி
    நல்ல வாயின நல்லோள் கண்ணே.

  எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத்
தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி அவனை இயற்பழித்துக்
கூறியது.

  (ப-ரை.) ‘நல்லவாயின நல்லோள்கண்? என்றது கண்பசந்தன
எ-று. சிறுவெண்காக்கை திரையாற் கரையில் ஏறடப்பட்ட பல
கறைகளை வலைச்சுற்றிக் கோத்த பலகறையென வெரூஉமென்றது.
நாம் வரைதல் வேண்டிக் கூறிய சொற்களைத் தனக்கு வருத்தஞ்
செய்வனவாகக் கொண்டு வெருவுகின்றானென்பதாம்.

  குறிப்பு. தாலி-பலகறை, சோழி. வலை செத்து-வலை எனக்
கருதி. வெரூஉம்-அஞ்சும். வலைகளது சுற்றில் சோழி கோக்கப்பட்டி
ருக்குமாதலின் அலை ஒதுக்கிய சோழியை வலையிலுள்ள சோழி என
நினைந்து அஞ்சும் என்றபடி. மெல்லம் புலம்பன்-மெல்லிய கடற்
கரையையுடைய தலைவன்; ஐங். 120 : 4, குறிப்பு. நல்லவாயின-பசத்
தன. நல்லோள்-தலைவியது. கண் நல்லவாயின; ஐங். 189 : 4.     ( 6 )