எ-து தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழி வேறு
பட்ட தலைமகள், ‘அவற்கு அவ்வாறு நிகழ்ச்சியில்லை; நம்மேல் அன்
புடையன்? 1 என்று தெளிக்கும் தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘சிறுவெண்காக்கை...............சிதைக்கும்? என்றது தான்
பற்றிய பரத்தையருடைய நலம் சிதைப்பானென்பதாம்.
குறிப்பு. சிதைக்கும்-அழிக்கும். நல்லன்-நல்லவன், என்றி
யாயின-என்று கூறுவாயானால். பல்லிதழ் உண்கண்-பல இதழ்
களையுடைய மலர்போன்ற மையுண்ட கண் : ஐங். 334; குறுந். 5 : 5;
கலித். 112 : 9.
(பி-ம்.) 1 ‘என்ற தோழிக்குச்? ( 10 )
(17) சிறுவெண்காக்கைப் பத்து முற்றிற்று.