எ-து தலைமகன் பிரிந்துழிச் சுரத்துவெம்மை நினைந்து தலை
மகள் சொல்லியது.
குறிப்பு. முன் அரை இலவத்து-முள் பொருந்திய அடிமரத்தை
யுடைய இலவ மரத்தினது. ஒள் இணர் வான்பூ - ஒளிபொருந்திய
கொத்தான பெரிய பூக்களை. அழலசைவளி - தீத்தன்மை பொருந்திய
காற்று. எடுப்ப - வீச. உருமுப் படுகனலின் - இடியிற் பட்ட தீயைப்
போல. உறைக்கும் - உதிரும்; புறநா. 384 : 7 முள்ளிலவின் பூவிற்கு
இடித்தீ உவமை. கவலை - கவர்ந்த வழி. தவல் இல்-கேடில்லாத.
தந்தோர் சுரம் போயினர்.
(32) செலவுப்பத்து முற்றிற்று