338

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


338. அம்ம வாழி தோழி சாரல்
    இலையில மலர்ந்த வோங்குநிலை யிலவம்
    மலையுறு தீயிற் சுரமுதற் றோன்றும்
    பிரிவருங் காலையும் பிரிதல்
    அரிது1வல் லுநர்நங் காத லோரே.

    எ-து தலைமகன் பிரிந்துழி. ‘இக்காலத்தே பிரிந்தார்? எனத்
தலைமகள் இரங்கிச் சொல்லியது.

   குறிப்பு. இலை இல மலர்ந்த - இலையில்லாதவனாய் மலர்ந்த.
இலவம்-இலவமரம்-இலையில் மலர்ந்த இலவம்; ?இலையில் மலர்ந்த
முகையிலிலவம்? (அகநா. 11 : 3, 185 : 12). தீயின் - தீயைப்
போல. இலவ மலர்க்குத் தீ :ஐங். 368 : 1. பிரிவருங்காலையும்
பிரிதற்கு அருமையான காலத்திலும் வல்லுநர் - திறமையுடையவர்

   (பி-ம்) 1 ‘வல்லினர்? ( 8 )