எ-து குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றா
ளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. உள்ளார் கொல்லோ-நினையாரோ: குறுந். 16 : 1.
232 : 1. வெள்ளிதழ்-வெள்ளிய இதழ்கள். வெள்ளிதழ்ப் பகன்றை
மலர் எனக் கூட்டுக. பகன்றை -சிவதைக்கொடி: புறநா. 16 : 14:
பெருங். 2.12 : 27. பகன்றை மலருக்குப் பகல் மதி உவமை.
பகன்றை மலர் வெண்ணிறமானது: குறுந். 330 : 4. ஈங்கைப்புதல் -
ஒருவகைப்புதல். இவண் உறைதல்-இங்கே வந்து தங்குதலை.
அகன்றோர் உள்ளார் கொல்லோ.