எ-து சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு
தலைமகள் தாய் சொல்லியது.
குறிப்பு. அலமரும் நோக்கின்-சுழலுகின்ற பார்வையை
உடைய. பைங்கிளி-பசுமையான கிளிபோன்ற பெண்: என்றது
தலைவியை. தலைவி வைத்து விளையாடிய பாவை, கிளி முதலிய
வற்றைக் கண்டு இரங்கல்: ஐந் ஐம். 33. காண்டொறும்-பார்க்குந்
தொறும் பூங்கணோள் - பூப்போன்ற கண்ணையுடையவள். பூங்க
ணோள் நீங்கினளோ.
(மேற்.) அடி, 5. ஓகார இடைச்சொல் இரக்கக் குறிப்பாய் வந்தது
(தொல். இடை. 47, ந). மு. தலைமகள் உடன்போகியவழி செவிலி
சேரியோரை வினாயது (தொல். அகத். 41, இளம்.). இது தேடிக்
காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது (தொல். அகத். 41. இளம்.)
இது தேடிக்காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது (தொல். அகத்.
36, ந.) நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல் (நம்பி. வரைவு. 15)
(பி-ம்) 1‘இதுவென் பாவைக் கினியநன் பாவை, இதுவென்
பைங்கிளி யெடுத்த பைங்கிளி, இதுவென் பூவைக் கினியசொற்
பூவையென், றலம்வரு நோக்கி னலம்வருஞ் சுடர்நுதல், காண்
டொறுங் காண்டொறுங் கலங்கி நீங்கின ளோவென் பூங்கணோளே.