500

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


500. கொன்றைப் பூவிற் பசந்த வுண்கண்
    குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்
    தொல்கவின் பெற்றன விவட்கே வெல்போர்
    வியனெடும் பாசறை நீடிய
    வயமான் றோன்றனீ வந்த மாறே.

      எ-து வினை முற்றிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

    குறிப்பு. கொன்றைப்பூ பசலைக்கு : ஐங் 458, குறிப்பு. சுனைக்
குவளை அழகுபெற்ற கண்ணுக்கு உவமை. வயமான் தோன்றல்-புலி
போன்ற தலைவன். வந்தமாறு இவட்கு உண்கண் கவின்பெற்றன. ( 10 )

    (50) வரவுச்சிறப்புரைத்த பத்து முற்றிற்று.

        முல்லை முற்றிற்று

பேயனார்
ஐங்குறுநூறு முற்றிற்று.

    இத்தொகை தொகுத்தார் புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார் ;
இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையார்.