எ-து தலைமகள் உடன் 2போயவழி அவள் பந்துமுதலாகிய
கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது.
குறிப்பு. நீர் நசைக்கு - தண்ணீர் வேட்கையைப் போக்கிக்
கொள்ளுதற்கு, ஊக்கிய உயவல் யானை-முயன்ற வருத்தத்தை
யுடைய யானையானது. அடி, 1. நற். 171 : 1. இயம்புணர் தூம்பின்-
வாத்தியங்களுள்ளே புணர்ந்த நெடுவங்கியம் போல. யானை
நெட்டுயிர்ப்புக் கொள்ளுதற்கு நெடு வங்கியம் உவமை; நற்
62 : 1-2: ?ஓய்களிறெடுத்த நோயுடைநெடுங்கை தொகுசொற்
கோடியர் தூம்பி னுயிர்க்கும்? (அகநா. 111 : 8-9). இவ்வங்கியத்
துக்கே யானைத் துதிக்கையும் உவமையாகக் கூறப்படும்:
மலைபடு. 6; புறநா. 152 : 15. அத்தம்-வழியில் பாவை பந்து கழங்கு:
பெருங் 3:5 : 74. எம்மகள் ஒழித்துச் சென்றனள்.
(மேற்.) மு. இது யாம் இவற்றைக் கண்டு வருந்த இவற்றை
எமக்கு ஒழித்துத் தான் நீரிலா ஆரிடைப் போயினாளென்றது
(தொல். அகத். 36, ந.)
(பி-ம்) 1‘பந்து பாவையும்? 2‘போகியவழி ( 7 )