9

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


9. வாழி யாதன் வாழி யவினி
  நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக
  எனவேட் டோளே யாயே யாமே
  கயலார் நாரை போர்விற் சேக்கும்
  தண்டுறை யூரன் கேண்மை
  அம்ப லாகற்க வெனவேட் டேமே.

இதுவுமது.

  (ப-ரை.) ‘இன்பம் நுகர்ந்தவன் செல்வமனைக்கண்ணே வைகும்
வண்ணம் வரையுந்துணையும் அவன்கேண்மை அம்பல் ஆகா
தொழிக? என விரும்பினேம் யாங்கள் எ-று.

  குறிப்பு. நன்று-அறம்; குறள், 1072. தீது-பாவம். கயல்ஆர்
நாரை-கயல்மீனை உண்ணும் நாரை. போர்வு-நெற்போர்; ஐங் 58
:1, 153 : 4; சீவக. 58. இப்பெயர் போர்பு, போர் எனவும் வழங்கப்

படுகிறது. சேக்கும்-தங்கும். அடி, 4; புறநா. 24:20 அம்பல்
சிலர் அறிந்து கூறும் பழிமொழி ; ‘சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்
துச் சொல்வது( இறை, 22, உரை) என்பர்.                             ( 9 )