26
(3) 1களவன் பத்து

 


26. கரந்தையஞ் செறுவிற் றுணைதுறந்து களவன்
   வள்ளை மென்கா லறுக்கு மூரன்
   எம்மும் பிறரு மறியான்
   1இன்ன னாவ தெவன்கொ லன்னாய்.

  எ-து தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார். ‘நின் முனிவிற்கு அவன்
பொருந்தா நின்றான்? என்றவழித் தலைமகட்குத் தோழி, ‘அவன்பாடு
அஃதில்லை? என்பதுபடச் சொல்லியது.

(ப-ரை.) ‘துணை துறந்து........மூரன்? என்றது தான் துணையாகக்
காதலித்து ஒழுகுகின்ற பரத்தையையும் நீங்கி எம்மையும் வருத்தி
ஒழுகுவான் எ-று.

(வேறுரை) ‘கரந்தையஞ் செறுவிற்றுணை துறந்து? என்றது
நின்னைத் துறந்து எ-று. ‘வள்ளைமென் காலறுக்கும்? என்றது
பரத்தையருள்ளும் ஒருத்தியை விடுவதும் ஒருத்தியைப் பற்றுவது
மாகி அவர்களை வருத்துகின்றான் எ-று.

  ‘எம்மும் பிறரு மறியான்? என்றது எம்மையும் பிறரையும் ............

  குறிப்பு. கரந்தையஞ் செறுவில் - கொட்டைக் கரந்தையை
உடைய வயலில். கொட்டைக்கரந்தை வயலில் தோன்றுவதொரு
பூடு; கொட்டாங்கரந்தையெனவும் வழங்கும்; பதிற். 40:5; அகநா,
226:6. துணை-பெண் நண்டை. வள்ளை-ஒருவகை நீர்க்கொடியினது.
மென்கால்-மெல்லிய தண்டை. எம்மும் பிறரும் அறியான்-நம்மையும்
பரத்தையரையும் அறியாதவனாகி. இன்னன் ஆவது-இத்துணைத்
தீச் செயலை உடையனாதல்; குறுந். 181:2; நாலடி. 205.

  அவன்பாடு-அவனிடத்தில்,
  (பி-ம்.) 1 ‘இன்னா னாவது?        ( 6 )