35

(4) தோழிக்குரைத்த பத்து


35. அம்ம வாழி தோழி நம்மூர்ப்
   பொய்கை யாம்ப னாருரி மென்கால்
   நிறத்தினு நிழற்றுதன் மன்னே
   இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே.

  எ-து வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணங் கூறியவழி,
‘அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுதுகாண் என்
மேனி பசந்தது’ எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. ஆம்பல் நார் உரி மென்கால்-ஆம்பற் கொடியின்
நாரை உரித்த மெல்லிய தண்டின். நிறத்தினும் நிழற்றுதல் மன்னே-
நிறத்தைக் காட்டிலும் ஒளிவீசு தலையுடையதாயிருந்தது முன்பு; இப்
பொழுது அது கழிந்தது; மன்: கழிவிரக்கப் பொருளது. “நீர்வள
ராம் பற்றூம்புடைத் திரள்கால், நாருரித் தன்ன மதனின் மாமை”
(நற். 6:1-2) இனி இப்பொழுது, பசந்தன்று-பசந்தது. மாமைக்
கவின்-மேனியின் பேரழகு; எழுவாய். மாமைக்கவின் நிழற்றுதல்
மன்னே, இனிப் பசந்தன்று. மாமைக்கவின் : ஐங். 103:4, 134:3.
மாமை நிறம் பசத்தல்: குறுந். 27:4-5. அடி, 4: ஐங். 144:3.                ( 5 )