40

(4) தோழிக்குரைத்த பத்து


40. அம்ம வாழி தோழி மகிழ்நன்
   ஒண்டொடி முன்கை யாமழப் பிரிந்துதன்
   பெண்டி ரூரிறை கொண்டன னென்ப
   கெண்டை பாய்தர வவிழ்ந்த
   வண்டுபிணி யாம்ப னாடுகிழ வோனே.

  எ-து உலகியல்பற்றித் தலைவன் தன்மனைக்கண் ஒரு ஞான்று
போனதே கொண்டு அவ்வழிப் பிரியாது உறைகின்றானென்று அயற்
பரத்தையர் பலரும் கூறினாரென்பது கேட்ட காதற்பரத்தை அவர்
பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. தொடி யணிந்த முன் கையையுடைய யாம்; ஐங். 38
குறிப்பு. பெண்டிர்-இற்பெண்டிர்; தலைவி. இறை கொண்டனன்-
தங்கினன். என்ப-என்று கூறுவர். பாய்தர-பாய. அவிழ்ந்த
ஆம்பல். கிழவோன் பிரிந்து இறைகொண்டனன் என்ப. ( 10 )

       தோழிக்குரைத்த பத்து முற்றிற்று.