407

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


407. நயந்த காதலிற் தழீஇப் பாணர்
    நயம்படு முரற்கையின் யாத்த பயன்றெரிந்
    தின்புறு புணர்ச்சி நுகரும்
    மென்புல வைப்பி னாடுகிழ வோனே.

     குறிப்பு. நயந்த-விரும்பிய. பாணர்-பாணரது. முரற்கை-
துள்ளலோசை; ஐங். 402 : 3, குறிப்பு. யாத்த- கட்டப்பட்ட. மெல்
புலவைப்பு-மென்மையான புலங்களையுடைய, மருத நிலம். கிழ
வோன்-நுகரும். ( 7 )