எ-து கடிமனைச்சென்ற செவிலி தலைமகனும் தலைமகளும்
புதல்வனொடு பாடல்கேட்டிருந்தமை கண்டு தன்னுள்ளே உவந்து
சொல்லியது.
குறிப்பு. முன்றிற் குறுங்காற்கட்டில்-முன்வாசலின்கண் உள்ள
குறிய காலையுடைய கட்டிலில்; குறுந். 359 : 3, மனையோள்-மனைவி.
மார்பின்-மார்பிடத்தில். மென்பிணித்து-மெல்லிய பிணிப்பை
யுடையதானது. யாழ் இன்பப்பொழுதிற்கு ஒத்தன்று; மென்
பிணித்து. பொழுதிற்கு ஒத்தன்று என்றது முல்லைப்பண்ணை.
(பி-ம்.) 1 ‘குறுங்காட்டின்னகை? ( 10 )
(41) செவிலிகூற்றுப் பத்து முற்றிற்று.