எ-து தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றென்பது
கேட்ட தோழி அவனை வினாயது.
(ப-ரை.) வேள்வித்தீயினையும் ஆம்பலஞ்செறுவினையுமுடைய
தேனூரென்றது மனத்தொழுக்கத் தூய்மையு ..... கூறியவாறு.
குறிப்பு. பகலில் தோன்றும் தீயைப் போல் இவள் நலம் கெட
?பகலெரி சுடரின் மேனி சாயவும்? (நற். 128 : 1). ஆம்பல் - செவ்
வல்லி, தேனூர் : ‘தேனூர்ச் சுண்ணாம்பும் மானூர் வெற்றிலையும்?
என்பது ஒரு பழமொழி. புலம்ப - வருந்த அனைநலம் - அவ்வளவு
நலம். பெண்டு - பரத்தை ; பெண்டு உடையளோ ?
(மேற்.) மு. ‘பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலை
யளிக்குமாறு கூறித் தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணும்
தோழிக்குக் கூற்றுநிகழும்? (தொல். கற்பு. 9. இளம்.). வணங்கியன்
மொழியால் வணங்கற்கண் தோழி கூற்று நிகழும் (தொல். கற்பு. 9, ந.).
(பி-ம்.) 1 ‘அனநலம்? ( 7 )