260

3. குறிஞ்சி

(26) குன்றக்குறவன் பத்து


260. குன்றக் குறவன் காதன் மடமகள்
    மென்றோட் கொடிச்சியைப் 1பெறற்கரிது தில்ல
    பைம்புறப் படுகிளி யோப்பலள்
    புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.

 எ-து பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி ‘இனிப் புனங்
காவற்கு வாரோம்? எனக்கூறி வரைவுகடாயது.
   (ப-ரை.) விளைந்தனவென்றது முற்றின என்றவாறு.
  குறிப்பு. பைம்புறப் படுகிளி-பசுமையான புனத்தையுடைய
தினையில் வீழ்கின்ற கிளிகளை. ஒப்பலள்-கடியமாட்டாள், புன்புல
மயக்கத்து-புன்செய்க் கலப்பில்; ஐங். 283 : 2 விளைந்தன-முற்றின ,
திணை விளைந்தன : கிளி ஒப்பலள், கொடிச்சியைப் பெறற்கரிது,
வரைந்து கொள்வாயாக என்றபடி.
   (மேற்). மு. தோழி தலைவனிடம் புனங்காவல் இனி இன்று
என்றது (தொல். களவு 24, இளம் ; 23, .) (பி-ம்.) 1 ‘பெறற்கரி
தில்ல? ( 10 )

(26) குன்றக்குறவன் பத்து முற்றிற்று