எ-து தலைமகன் குறிவழிச் சென்று தலைமகளைக் கண்ட பாங்கன்
தன்னுள்ளே சொல்லியது.
(ப-ரை.) ‘தொண்டித் தண்ணறு நெய்தல்போல் நாறும் கூந்தல்?
என்றது சேய்மைக்கண்ணே நாறுதல் நோக்கி; பதிற். 65 : 10.
குறிப்பு. துயிலை அறியாது அரவுறுதுயரம்-பாம்பு தீண்டினாற்
போன்ற துயரம்; நற். 75 : 2-5. குறுந் 43 : 4-5. நாறும்-மணம்
கமழும். பின்னிருங் கூந்தல்-பின்னல் பொருந்திய கரிய கூந்தலை
யுடைய தலைவியாய் அணங்குற்றோர்-நோயுற்றோர். உற்றோர் துயி
லறியாது துயரம் எய்துப.
(மேற்,) மு. பாங்கன் தலைவனை நோக்கி, ‘நின்னை அணங்காக்கி
யாள் எவ்விடத்தாள்?? என வினாய், அவ்வழிச் சென்று தலைவியைக்
கண்டனன் (தொல். களவு. 11, இளம்.) : பாங்கன் கிழவோனை
இகழ்ந்ததற்கிரங்கல் (நம்பி. களவு. 21). ( 3)