181


(19) நெய்தற் பத்து


181. நெய்த லுண்க ணேரிறைப் பணைத்தோட்
   பொய்த லாடிய பொய்யா மகளிர்
   குப்பை வெண்மணற் குரவை நிறூஉம்
   துறைகெழு கொண்க னல்கின்
   உறைவினி 1தம்மவிவ் வழுங்க லூரே.

 எ-து இக்களவொழுக்கம் நெடிதுசெல்லின் இவ்வூர்க்கண்
அலர் பிறக்குமென்று அஞ்சியிருந்த தலைவி, ‘தலைமகன் வரைந்து
கொள்ளத் துணிந்தான்? என்று கூறிய தோழிக்குச் சொல்லியது.

  (ப-ரை.) சிறைப்புறம் : ‘மகளிர்............கொண்கன்? என்றது மக
ளிர் தம் காதலரோடு, ஆடும் இவ்வூரிடத்துத் தனித்தல் அரிதென்
தாம்.

  குறிப்பு. நெய்தல் உண்கன் : ஐங். 151 : 3, குறிப்பு. இறை-
முன்கை ; ஆகுபெயர். இறைப்பணைத்தோள் : ஐங். 239 : 4, 459 : 1,
பொய்தல்-விளையாட்டு, குப்பை-குவியல், குரவை-கைபிணைத்தாடும்
ஒருவகை விளையாட்டு, நிறூஉம்-நிறுத்தும். நல்கின்-வரைந்து
அருள் செய்தால் உறைவு-தங்குதல் . அழுங்கல்-கெடுதல், அழுங்
கல் ஊர் என்றது வெறுப்பினால் கொண்கன் நல்கினால் இவ்வூர்
உறைவு இனிது.

    (பி-ம்.) 1 ‘தம்மவவ்?   ( 1 )