எ-து தலைமகள் மெலிவுகண்டு தெய்வத்தாலாயிற்றெனத் தமர்
நினைந்துழித் தோழி அறத்தொடு நின்றது.
குறிப்பு. செருந்தி-வாட்கோரைப்பூ. விரைஇ-கலந்து, கைபுனை
தல்-அலங்கரித்தல், கடவுள்-தெய்வம் பெருந்துறை-நீர்த்துறை
யின்கண். இவள் என்றது தலைவியை அணங்கியோள்-நலத்தை
வருத்தியவன். அணங்கியோன் கடவுளல்லன்; மக்கட் சாதியினன்
என்றபடி.
(மேற்.) மு. குறிபார்த்தவழி வேலனை முன்னிலையாகக் கூறியது
(தொல். களவு, 24. இளம்.) அறத்தொடு நிற்றலில் வேலற்குக்
கூறியது (தொல். களவு. 23, ந.) ( 2 )