எ-து ‘ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?? என
வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
குறிப்பு. அலங்குதல்-அசைதல். நெய்தல் : கடற்கரைப்பூ.
கொற்கை-பாண்டியர்களின் தலைநகரங்களுள் ஒன்று; பாண்டிய
நாட்டின் கீழ்கடலின் கரையிலுள்ளது. உறைக்கும்-ஒக்கும். அரம்
போழ் அவ்வளை-அரத்தால் பிளக்கப்பட்ட அழகிய வளைகளையுடை
யவள்; ஐங். 194 : 1, நரம்பு-இசை நரம்பு. ஆர்த்தன்ன-ஒலித்தாற்
போன்ற. தீங்கிளவியள்-இனிய சொல்லையுடையவள். எயிற்றையும்,
வாயையும், வளையையும் கிளவியையுமுடைய குறுமகளே என்னால்
நயக்கப்பட்டாள் என்றபடி.
(பி-ம்) 1 ‘அலங்கிறை? ( 5 )