எ-து தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(ப-ரை) அரிவோர் நெய்தற்பூவை நீக்கி வெண்ணெல் அரியு
மென்றது தனக்கு அடுத்தது செய்தலன்றிப் பிறர்க்கு வருத்தம்
செய்யானெனத் தலைமகன் குணம் கூறியவாறாம்.
குறிப்பு. நெய்தல் தளையவிழ் வான்பூ-நெய்தலினது கட்ட
விழ்ந்த பெரிய பூவை. வெண்நெல்-வெண்மையான நெல்லை.
அரிநர்-அறுப்பவர்கள். மாற்றினர்-நீக்கி. நெல் அரிநர் நெய்தற்
பூவை மாற்றினராகி அறுக்கும் புலம்பன், நெற்செறுவின் நெய்தற்
களை : நற். 195 : 6-7; குறுந். 309 : 5-6. பல்லிதழ் உண்கண் ஐங்.
170 : 4, குறிப்பு. பனி செய்தோன்-நீர் உறும்படி செய்தவன். புலம்
பன் எம் கண்ணைப் பனி செய்தோன்.
(பி-ம்.) 1 ‘வொண்ணெல்? ( 10 )
(19) நெய்தற்பத்து முற்றிற்று.